பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
Updated on
1 min read

கடல் ஆய்வுக்கான ஐஆர்என்எஸ்எஸ் 1இ என்ற செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடல் ஆய்வுக்காக இதுவரை 4 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், 5-வது செயற்கைக்கோள் நாளை (இன்று) காலை 9.31 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத் தில் இருந்து விண்ணில் செலுத்தப்படு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்த செயற்கைக் கோள்கள் மூலம் கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்துக்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்து வருகிறது. எனினும், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.

இவ்வாறு கிரண் குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in