

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக உயிர்த் தியாகம் செய்த 219 பேரின் குடும்பங் களுக்கும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற மூன்று பேருக்கும், மொத்தம் ஆறு கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஏழு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக.தலைமைக்கழகம் வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுக தலைமைக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல், 219 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து, மரணமடைந்த 219 பேர் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும், அதிமுக சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர், இறுதி நாளான நேற்று, 23 குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 69 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான வரை வோலைகளையும் வழங்கினர்.
7 கட்டங்களாக நிதியுதவி
இதுவரை ஏழு கட்டங்களாக, நேற்று வரை மொத்தம் 219 பேருக்கு, ஆறு கோடியே 57 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மொத்தம் ஆறு கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.