

சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் திறக்கப்பட உள்ள அம்மா வாரச் சந்தையில் பங் கேற்க 23 துறைகள் ஆர்வமாக உள்ளன. இத்துறைகள் இதுவரை 177 கடைகளைத் திறக்க முன் வந்துள்ளன.
சென்னையில் காய்கறிகள், தானிய வகைகள், மளிகைப் பொருட்கள், இறைச்சி மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட 1,256 வகையான பொருட்களை, இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், மிகக் குறைந்த விலை யில், ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக சென்னை மாந கராட்சி நிர்வாகம் சார்பில் அம்மா வாரச்சந்தைகள் சென்னையில் விரைவில் திறக்கப்பட உள்ளன.
வாரம் முழுவதும் ஒவ்வொரு இடங்களில் வாரச்சந்தைகளை திறக்கும் விதமாக, அரும்பாக்கம், மின்ட், கோட்டூர்புரம், மெரினா கடற்கரை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த வாரச் சந்தையில் 200 கடைகளைத் திறக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதற்காக பல்வேறு அரசுத் துறைகளை மாநகராட்சி அதிகாரிகள் அணுகி, அம்மா வாரச் சந்தையில் கடை திறக்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இது வரை 23 அரசுத் துறைகள் சார்பில் 177 கடைகளைத் திறக்க அத்துறைகள் விருப்பம் தெரி வித்துள்ளன. மேலும் கரும்பு வளர்ச்சித்துறையை அணுகி, அச்சு வெல்லம், சர்க்கரையை விற்பனை செய்யவும், சிறுபான்மை நலத்துறையை அணுகி, அவர்கள் மதம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யவும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
தனியார் துறைகளுக்கு அழைப்பு
மேலும் தனியார் துறைகளான திருப்பூர் ஆயத்த ஆடை நிறு வனங்கள், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், சமையலுக்கு தேவையான மசாலாக்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களும் கடை திறக்க ஆர்வ மாக உள்ளனர். தனியார் நிறு வனங்கள், அதன் தயாரிப்பு பொருட்களை, சந்தை விலையை விட மிக மலிவாக விற்க வாய்ப் புள்ளது என்றனர்.