

‘அம்மா அழைப்பு மையம்’ என்பது எங்களை பார்த்து காப்பியடிக்கப்பட் டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். தைலாபுரம் தோட்டத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
அம்மா அழைப்பு மையம் 1100 குறை தீர்ப்பு மையம் என அறிவித்துள்ளனர். 56 மாதமாக குறைகளைத் தீர்க் காத அரசு இப்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். செப்டம்பரில் பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை யில், மக்கள் குறைகளைத் தெரிவிக்க முதல்வர் அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் இலவச தொலைபேசி எண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம். இது எங்களைப் பார்த்து காப்பியடிக்கப்பட்ட திட்டம் என்றார்.