‘தி இந்து’ தமிழ் - ஜம்போ ஆடி விற்பனை: சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடக்கம்

‘தி இந்து’ தமிழ் - ஜம்போ ஆடி விற்பனை: சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடக்கம்
Updated on
1 min read

‘தி இந்து' தமிழ் நாளிதழ் சார்பில் ‘ஜம்போ ஆடி விற்பனை கண்காட்சி' நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை இக்கண்காட்சியை காணலாம். நுழைவுக் கட்டணம் ரூ.50.

ஆடி மாதம் எப்போது வரும், குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என ஆவலாக காத்திருக்கும் சென்னை வாசிகளுக்காகவே ‘ஜம்போ ஆடி விற் பனை கண்காட்சி' சுமார் 4,400 சதுர மீட்டர் பரப்பில் நடைபெறுகிறது. 150-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கேற் கின்றனர்.

இங்கு செல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள், குளியலறை மற்றும் சமையலறை சாதனங்கள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், அழகு மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், துணி வகைகள், நகைகள், கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான சாதனங்கள், பொம்மைகள் உள்ளிட்டவை கிடைக்கும்.

புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப் புகள் 5 முதல் 50 சதவீத தள்ளுபடி விலை யில் கிடைப்பது இக்கண்காட்சியின் சிறப் பாகும். மேலும் பீட்சா முதல் பஞ்சு மிட் டாய் வரை அறுசுவை உணவு வகைகளும் இங்கு கிடைக்கும்.

ஆச்சி மசாலா, பிக் எஃப்எம், ஆச்சி குடிநீர் ஆகியவை இக்கண்காட்சிக்கு உறுதுணை புரிகின்றன.

இக்கண்காட்சியை நடத்தும் ஐ ஆட்ஸ் அன் ஈவென்ட்ஸ் நிறுவனம் கூறும்போது, “பலதரப்பட்ட பொருட்களை குறைந்த விலையில் மக்கள் வாங்க வழி வகுப்பது மட்டுமின்றி விற்பனையாளர்கள் தங்களின் பொருட்களை விற்கவும் இதுபோன்ற கண்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 9003016954 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in