Published : 29 Nov 2014 12:15 PM
Last Updated : 29 Nov 2014 12:15 PM

தமிழக சட்டப்பேரவை முன்னவராக நத்தம் ஆர்.விஸ்வநாதன் நியமனம்

தமிழக சட்டப்பேரவை முன்னவராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி முதல்கட்டமாக ஐந்து நாட்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2-ம் கட்டமாக ஜூலை 10-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை பேரவைக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில், 4-ம் தேதி கூடும் பேரவையில், முல்லை பெரியாறு விவகாரம், காவிரி ஆற்றில் கர்நாடகம் அணை கட்டும் திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x