ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள்- அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள்- அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொதுக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கட்சியின் எம்எல்ஏக்கள் ஆங்காங்கே நடக்கவுள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in