திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்: உயர் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்: உயர் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்புக் கல்லூரிகளில் முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிட ஒப்புதல் வழங்குமாறு தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ.இளங் கோவன் மனு தாக்கல் செய்திருந் தார். திருவள்ளூர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் கல்லூரிகளின் கல்வித் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிரந்தர அடிப்படையில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் களை நியமனம் செய்யும் வகையில் நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு ஒப்புதல் அளித்த பிறகு இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங் களை நிரப்புவது தொடர்பான பல்கலைக்கழகத்தின் கோரிக்கை தற்போது அரசின் பரிசீலினையில் இருந்து வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள தாவது:

பல்கலைக்கழகத்தில் காலி யாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்புவதில் நிதிச்சுமை எதுவும் இல்லை. இந்நிலையில் அரசு ஒப்புதல் அளிக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வதற்கு சரியான காரணம் இருப்பதாக தெரிய வில்லை. ஆகவே, அந்தப் பணியி டங்களை நிரப்பு வதற்கு உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஒரு மாத காலத்துக் குள் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தர வில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in