தமிழகம்
செந்தில்பாலாஜியின் உண்ணாவிரத அறிவிப்பு நாடகம் என அமைச்சர் குற்றச்சாட்டு
அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில் பாலாஜியின் உண்ணாவிரத அறி விப்பு, நாடகம் என மாநில போக்கு வரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அதிமுக அலுவல கத்தில் அவர் நேற்று செய்தியாளர் களிடம் கூறியது:
கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பான விவகாரத்தில், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
என்னால்தான் மருத்துவக் கல்லூரிகள் பணிகள் தடை படுவதாக குற்றம் சாட்டியுள் ளார்.
செந்தில்பாலாஜி அறிவித்துள்ள உண்ணாவிரதம் வெறும் நாடகம். வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அவருக்கு வேண்டியவர்களின் நிலம் 200 ஏக்கர் உள்ளது. அங்குள்ள நில உரிமையாளர்கள், நில புரோக்கர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்பதை அப்பகுதி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
