

கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு மூலம், மாநில அளவிலான மரபு வழி, நவீன பாணி பிரிவில் ஓவிய, சிற்ப கலைக்காட்சி நடத்தி விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில், சென்னையில் மாநில அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சி நடத்தி, சிறந்த ஓவியங்கள்,சிற்பங்கள் அடிப்படையில் மரபு மற்றும் நவீன பாணிப்பிரிவில் 30 வயதுக்குட்பட்ட 10 மூத்த கலைஞர்கள், 10 இளங் கலைஞர்கள் என 40 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த கலைஞர்களுக்கு ரூ.9 ஆயிரத் துக்கான காசோலை, இளங்கலைஞர் களுக்கு ரூ.3 ஆயிரத்து 500க்கான காசோலையும் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்பும் கலைஞர் கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரக்குறிப்பு, கல்வித்தகுதி, படைப்பின் தலைப்பு, பெயர், தொலை பேசி எண் ஆகிய விவரங்களுடன் ஓவியங்கள், சிற்பங்களின் 10க்கு 12 அளவு 2 புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
கலைஞர்கள் மரபு வழி அல்லது நவீன பாணி என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் பங்கேற்க வேண்டும். ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடம் இருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு மூலம் புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் உரிய விவரங்கள் தெரிவிக்கப்படும். இந்த விவரங்களின் அடிப்படையில் சுயவிவர குறிப்பு புகைப்படங்களை இம்மாதம் 20-ம் தேதிக்குள் ஆணையர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், 2-ம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை 28193195, 28192152 என்ற தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.