

தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் எம்.தமின்முன் அன்சாரி கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வனம், சட்டம், நீதி, சிறைச் சாலைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழக சிறைகளில் 6,700-க் கும் அதிகமான ஆயுள் தண் டனை கைதிகள் 20 ஆண்டு களுக்கும் மேலாக சிறைகளில் வாடி வருகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 1,400-க்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிபிஐ விசாரித்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகளில் சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசு விடுவிக்க சட்டத் தில் வழிவகைகள் உள்ளன. எனவே ஜாதி, மதம் என எந்த வேறுபாடுகளும் இன்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன் னிப்புடன் கூடிய மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண் முகம், ‘‘கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் கைதிகள் விடு தலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர் பான வழக்கு நிலுவையில் இருப்பதால் கைதிகளை விடு தலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறைக் கைதி களுக்கு தேவையான வசதி களை தமிழக அரசு செய்து வருகிறது. ஒரு கைதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ரூ.8 லட்சம் அரசு வழங்கியுள்ளது. அவருக்கு மேலும் ரூ.11 லட்சம் சிகிச்சைக்காக வழங்க வேண்டும் என கோரிக்கை கள் வந்துள்ளன. அதையும் அரசு பரிசீலித்து வருகிறது’’ என்றார்.