

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழக அரசின் 64 துறை களைச் சேர்ந்த அரசு ஊழியர் கள் காலவரையற்ற போராட் டத்தை தொடங்கியுள்ளனர்.
கடும் வறட்சியும், குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் அரசு ஊழியர்களின் பணி மிகவும் முக்கியமானது. அவசர மானது. ஆனால், இவற்றையெல் லாம் கருத்தில் கொள்ளாமல் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தும் அரசு ஊழியர்களை அழைத்து பேசாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
அரசு ஊழியர்கள் போராட்டம் திடீரென தொடங்கவில்லை. கடந்த 2016 பிப்ரவரியிலேயே அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது தேர்தல் நேரம் என்பதால் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், அரசு ஊழியர்களுக்கான 11 அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டார். குறிப்பாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய் வது தொடர்பாக வல்லுநர் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.
ஜெயலலிதாவின் அறிவிப்பு களை நிறைவேற்றவே நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் எனக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் முதல்வ ராக இருக்கும்போதும் இந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட வில்லை. இப்போது பழனிசாமி முதல்வராக இருக்கும்போதும் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு களை செயல்படுத்தியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பலமுறை கோரிக்கைவிடுத்தும் அரசிடம் இருந்து பதில் இல்லை. அதன் விளைவாகவே இப்போது 5 லட்சம் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போதும் காலம் கடந்துவிட வில்லை. அரசு ஊழியர் சங்கங் களின் பிரதிநிதிகளை முதல்வர் கே.பழனிசாமி உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களுக்காக ஏற்கெனவே ஜெயலலிதா வெளி யிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறி யுள்ளார்.