

சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ரோசய்யா மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா:
அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின விழா நல்வாழ்த்துகள். நாட்டு மக்கள் அனைவரும் பிரிக்க முடியாத சகோதரத்துவ பிணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளோம். சுதந்திர தினத்தில் பரஸ்பர புரிதலுக்கான அடிப்படைகளை பலப்படுத்தவும், இந்தியாவை மிகப்பெரிய நாடாக மாற்றும் பணியில் ஆழமாக அர்ப் பணித்துக்கொள்ளவும் உறுதி மொழி ஏற்போம்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
நாம் அனை வரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடனும், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து ஓய்வறியா பிரதமர் நரேந்திர மோடியின் வழியில் இணைவோம். நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம். அனைத்து மக்களுக்கும் எனது 70-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்:
ஏழ்மை, ஏற்றத்தாழ்வை போக்கும் பாரத தேசமாக பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாக பரிணமித்து வருகிறது. தேச விடு தலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து சுதந்திரத்தை கொண்டாடுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
அனைவருக்கும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின், தமிழ் மாநிலக் குழுவின் புரட்சிகர நல்வாழ்த்துகள். வணிகம் என்ற பெயரால் நாட்டை தனதாக்கிக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை தாயகத்தில் இருந்து வெளியேற்ற போராடி இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன்:
சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடு களுக்கு அப்பால் அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு போராடியதன் விளைவாகவே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே, அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும், மதச்சார்பின்மையையும் பாது காக்க சமூக கொடுமைகளை எதிர்த்திட ஒன்றுபட்டு குரலெழுப்ப சுதந்திர தினத்தில் சூளுரைப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் துயரங்களுக்கும் முதன்மை காரணமாக இருப்பது மதுதான். மதுவில் இருந்து தமிழகத்துக்கு எப்போது விடுதலை கிடைக்கிறதோ அப்போதுதான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், உள்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை இந்தியா இன்னும் சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வறுமை ஒழிந்திட இந்த சுதந்திர தினம் வழிவகுக்கட்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
பயங்கரவாதமும், தீவிர வாதமும் வேரோடு களையப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். இதன்மூலம் இந்திய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாச்சாரம் பேணிக்காக்கப்பட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
மேலும், சமக தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங் கிணைப்பாளர் வசீகரன், எஸ்டிபிஐ மாநில தலைவர் தெகலான் பாகவி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.