

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து திருச்சியில் புதிய தமிழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அருகே புதிய தமிழகக் கட்சியின் நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் சிலர் கூடி இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
அதே போல் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம் முயற்சி செய்த போது கைது செய்யப்பட்டனர்.