

அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு இன்று 66-வது பிறந்த நாள். முதல்வரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அதிமுகவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்ன தானம் ரத்த தானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 66 கிலோ கேக் வெட்டி, முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றகின்றனர்.
அந்தந்த பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசு மருத்து வமனைகளில் திங்கள் கிழமை பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர். பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
புகைப்படக் கண்காட்சி
முதல்வரின் பிறந்தநாளை யொட்டி, மாவட்டத் தலைநகர்க ளில் சிறப்பு புகைப்படக் கண் காட்சிக்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.