தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ.2,766 கோடியில் 77,517 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ.2,766 கோடியில் 77,517 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

கோவை உட்பட 10 மாவட்டங்களில் ரூ.2,766.58 கோடி மதிப்பில் 77,517 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடை பெறுவதாக தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், குடிசைப்பகுதி மாற்று வாரிய முதன்மைச் செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஷம்புகல்லோலிகர் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.

அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்ட வீடு கட் டும் திட்டத்தில் முதல்கட்டமாக 10 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

குடிசை மாற்று வாரியம் மூலம் 2.46 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வீடு கட்டும் திட்டத் தில் பயனாளிகளுக்கு அதிக அளவு வீடுகள் கட்டிக் கொடுத்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’ என்றார்.

அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் பேசும்போது, ‘வரும் 2023-ம் ஆண்டுக்குள் குடிசைப் பகுதி கள் இல்லாத மாநிலமாக தமிழ கத்தை மாற்ற முயற்சி மேற்கொள் ளப்படுகிறது. அதேபோல, பிரதம மந்திரியின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஏழை மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித் தரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பின்படி 9,73,434 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுமத்திடம் இருந்து திட்டங்களுக்கு அதிக அளவில் ஒப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது வரை ரூ.8,660 கோடி மதிப்பில் 2,46,268 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

குடிசைப்பகுதி மாற்று வாரிய கோவை சரகம் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட் டங்களில் பணிகள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. இந்த மாவட் டங்களில் இதுவரை ரூ.2,766.58 கோடி மதிப்பில் 77,517 வீடுகள் கட்ட திட்ட ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன’ என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in