தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்ப விரும்புவதாக இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவனர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியா, தமிழக அரசு, இலங்கை ஆகியோரிடயே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது பற்றி சந்திரசேகரன் தெரிவிக்கையில், இலங்கை தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க விரும்புகின்றனர், அகதிகள் என்பதிலிருந்து விடுபட விரும்புகின்றனர் என்றார்.

இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து தான் விக்னேஸ்வரனிடம் கலாந்தோசித்ததாக தெரிவித்த சந்திரசேகரன், இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் தனக்கு எழுதியிருந்த கடிதத்தில், மறுகுடியமர்வு விஷயத்தில் இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே மனமுவந்து தாயகம் திரும்புவது மிக முக்கியமானது என்று கூறியதாக தெரிவித்தார்.

"தெரியாத இடத்தில் வாழ முடிந்தவர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் புதிய வாழ்வைத் தொடங்குவது பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. ஆனால் இந்திய, இலங்கை அரசுகளின் ஆதரவு தேவை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in