

சாலை விபத்து, மின்னல் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து தீவிபத்திலும், வேலூர் மாவட்டம் வடக்குப்பட்டுவைச் சேர்ந்த சின்னத்தாய் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பட்டறைக்கால்வாய் அருகில் பணியில் இருந்த போது மயக்கமடைந்து இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜி.நாகமங்கலம் கிராமம் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் ராணி, பிரகாஷ், கார்த்திக், காசி, சகாயம், சிவக்குமார், அப்துல்கைம் ஆகியோர் இறந்தனர்.
அதே போல், நெல்லை மாவட்டம் மேலக்கடையனூரைச் சேர்ந்த கருப்பசாமி, சின்னராசு, விஜய், விழுப்புரம் மாவட்டம் முகையூரைச் சேர்ந்த இனியாஸ், மதியனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து பேரும், இடி, மின்னல் தாக்கியதில் இறந்தனர்.
பல்வேறு சம்பவங்களில் இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.