ஜல்லிக்கட்டு நடத்தகோரி தமிழகம் முழுவதும் திமுக ரயில் மறியல்: ஸ்டாலின், கனிமொழி உள்பட 50 ஆயிரம் பேர் கைது

ஜல்லிக்கட்டு நடத்தகோரி தமிழகம் முழுவதும் திமுக ரயில் மறியல்: ஸ்டாலின், கனிமொழி உள்பட 50 ஆயிரம் பேர் கைது
Updated on
2 min read

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார் பில் நேற்று ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட் டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களாக மாணவர் கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பல லட்சக் கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் 4-வது நாளாக 2 லட்சத்துக்கும் அதிக மானோர் திரண்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காலை 9 மணிக்கு தியாகராய நகர் பஸ் நிலையத்திலிருந்து ரங்கநாதன் தெரு வழியாக ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கு.க.செல்வம், மோகன், திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, டாக்டர் கனிமொழி உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

அங்கு தாம்பரத்திலிருந்து கடற் கரை வரை செல்லும் மின்சார ரயிலை மறித்து மறியலில் ஈடுபட் டனர். “வேண்டும் வேண்டும் ஜல்லிக் கட்டு வேண்டும், தமிழ் கலாச் சாரத்தை அழிக்காதே, பீட்டாவை தடை செய், மத்திய அரசே அவசரச் சட்டம் கொண்டு வா” என அனைவரும் கோஷமிட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரை யும் கைது செய்த காவல் துறையினர் வேன்கள் மூலம் அழைத்துச் சென்று திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மதியம் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

எழும்பூரில் கனிமொழி, தயாநிதி

எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் காலை 9.30 மணிக்கு காந்தி இர்வின் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அனைவரும் மின்சார ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் அனை வரும் கோஷமிட்டனர். பின்னர் கனி மொழி உள்ளிட்ட அனை வரும் கைது செய்யப்பட்டு திரு மண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திமுகவினர் காலை 9.15 மணிக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையம் காலை 9.15 மணி யில் இருந்து 10.30 மணி வரை பர பரப்புடன் காணப்பட்டது. நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

சைதையில் துரைமுருகன்

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் காலை 10.30 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் துரைமுருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட் டனர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி உள்ளிட்டோரும் கைது செய்யப் பட்டனர். சென்னையில் 7 இடங் களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயி ரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, நாகர் கோவில், ராமநாதபுரம், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் என தமிழகம் முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மதியம் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in