

ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் தேர் வில் தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி யாற்ற வேண்டுமானால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். கேந்திரிய வித் யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய சிபிஎஸ்சி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரி யர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற் றால்தான் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம்.
கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு தகுதித்தேர்வு (மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித்தேர்வு) நடத்தப்பட்ட நிலை யில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தகுதித்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தபடி ஏப்ரல் 29-ம் தேதி (சனிக்கிழமை) இடை நிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் (தாள்-1) மறுநாள் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் (தாள்-2) நடைபெற உள்ளன. முதல் நாளன்று 598 மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேரும், 2-வது நாளில் 1,263 மையங்களில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் தேர் வெழுதுகிறார்கள். இரு நாட் களுக்கு நடைபெறும் தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் கலந்துகொள்வதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் தாள்-1 தேர்வை 27 மையங்களில் 10 ஆயிரத்து 147 பேரும், தாள்-2 தேர்வை 88 மையங்களில் 31 ஆயிரத்து 235 பேரும் எழுதுவதாக மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று போதிலும் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுமாறு விண் ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விண்ணப் பதாரர்கள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர் களிடம் ஏதேனும் பிட் பேப்பர் இருக்கிறதா, கால்குலேட்டர், செல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்ளனவா என்ப தெல்லாம் பரிசோதனையின்போது ஆய்வு செய்யப்படும். பரிசோதனை முடிவடைந்த பின்னரே அவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது விண்ணப்பதாரர்கள் விடைத்தாளின் நகலை (ஓஎம்ஆர் ஷீட் பிரதி) எடுத்துச்செல்லலாம். தகுதித்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.