

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, திமுக உறுப்பினர் கே.என்.நேரு பேசினார். ‘‘விவசாயம், கால் நடைத் துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்கிறது. வரும் 22-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது. இதுபோன்ற முக்கிய விவாதங்களில் திமுக உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது அவசியம். அவர்கள் ஜனநாய கக் கடமையாற்றும் வகையில், அவர்களை இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண் டும்’’ என்று அவர் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராமசாமி பேசும்போது, ‘‘முதல்வரின் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் தில் திமுக உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை தெரி விக்க வசதியாக அவர்கள் மீதான இடைநீக்க உத்தரவை பேரவைத் தலைவர் மறுபரி சீலனை செய்ய வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளிக்காமல் அவையின் அடுத்த அலுவலை பேரவைத் தலைவர் பி.தனபால் கவனிக்கத் தொடங்கினார். உடனே எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்குமாறு கூறினர்.
இதையடுத்துப் பேசிய தனபால், ‘‘இதுதொடர்பாக அவையில் நேற்று விளக்கம் அளித்துவிட்டேன். திமுக உறுப்பினர்கள் விவகாரத்தில் பலதடவை பொறுமையாக இருந்தேன். அன்றைய தினம் வேறு வழியின்றிதான் திமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய நேரிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை’’ என்றார். அதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.