

மதுரை கீழவெளி வீதியைச் சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். இவர் மதுரை மாவட்ட நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் பி.எஸ்.அப்துல்காதர், அவரது மனைவியும் மாநகராட்சி சுகாதாரக் குழு முன்னாள் உறுப்பினருமான ராலியாபானு ஆகியோர் என்னுடன் பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர்.
ராலியாபானு சுகாதாரக் குழு உறுப்பினராக இருந்தபோது நெல் பேட்டையில் செயல்பட்டு வந்த ஆடுகள் அறுக்கும் மையத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு மாற்ற திட்டம் கொண்டு வந்தார்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர். இதற்கு நான்தான் காரணம் என்று நெல்பேட்டையில் ஏராளமான மீன் கடைகளை நடத்தி வரும் அப்துல்காதர் கருதி னார். அவரது முயற்சியின் பேரில், ஆடு அறுக்கும் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி பூட்டை உடைக்க நானும், என் நண்பர் ரபீக் என்பவரும் முயன்றதாகவும், அதை தடுத்த போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் என் மீது பொய் புகார் பெற்று போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எங்களை விடுவித்தது. நீதிமன்ற உத்தரவில், உள்நோக் கத்தில் எங்கள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்திருப் பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததால் தமிழக அரசு தலைமை செயலாளர், மதுரை நகர் போலீஸார் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதன்மை முன்சீப் பிரேம் ஆனந்த் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் தமிழக அரசு தலைமை செயலாளர், மதுரை நகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஆஜராகவில்லை. போலீஸார் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் தங்கள் தரப்பு பதிலை அளிக்கவில்லை. எதிர் மனுதாரர்களான போலீஸ் அதிகாரிகளுக்கு சமூக பொறுப்பு உள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை நடத்தியிருக்க வேண்டும்.
எனவே மனுதாரர் கோரியபடி அவருக்கு தமிழக அரசு தலைமை செயலாளர், மதுரை போலீஸார் 7 பேரும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ மொத்தம் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள் ளார்.