வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர் அட்டை விநியோகம் தொடக்கம்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர் அட்டை விநியோகம் தொடக்கம்
Updated on
1 min read

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டிய லில் பதிவு செய்வது மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் 7-வது தேசிய வாக்காளர் தின விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாவட்ட ஆட்சியருமான ப.மகேஸ்வரி தேசிய வாக்காளர் தின உறுதிமொழி வாசிக்க, நிகழ்ச்சி யில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, தயாரிக்கப்பட்ட இறுதி வாக் காளர் பட்டியலில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 தொகுதி களில் 82 ஆயிரத்து 666 பேர் புதிய வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணி, இந்நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி, மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) க.சு.கந்த சாமி ஆகியோர், புதிய வாக்காளர் களுக்கு வண்ண வாக்காளர் அட்டைகளை வழங்கினர்.

வாக்காளர் தகுதி பெற்ற, எத்திராஜ் கல்லூரி மாணவி பாத்திமா இஹ்ஷானா கூறும் போது, “நான் 18 வயது நிறை வடைந்து, வாக்காளர் என்ற தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்மை ஆள்பவர் களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைத்திருப்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர்கள் வெ.அன்புச் செல்வன் (வருவாய் மற்றும் நிதி), மா.கோவிந்தராவ் (கல்வி), மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) கே.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 285 இ- சேவை மையங்களில் முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளவர்கள், தேர்தல் ஆணையத்தால் தங்கள் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியை காட்டி, வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in