

கிராமங்கள்தோறும் கட்சியை வலுப்படுத்த தமாகா மாவட்டத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா மாவட்டத் தலை வர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிராமங்கள் தோறும் கட்சியை பலப்படுத்து வதற்கான பணிகளை மேற்கொள் வது, உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக்கு வலு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப் படுகிறது. மேலும் தேர்தல் தோல் விக்கான காரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வரும் 6-ம் தேதி மாநில செயலாளர்கள், இணைச் செயலர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் கூட்டமும், 11-ம் தேதி செயற்குழு கூட்ட மும் நடத்தப்படும். கூட்டங்களில் கூறப் படும் கருத்துகளை ஒருங்கி ணைத்து, கட்சி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து அறிவிக்கப் படும் என்றார்.