Published : 28 Nov 2014 11:48 AM
Last Updated : 28 Nov 2014 11:48 AM

பறக்கும் ரயில் தடத்துடன் புறநகர் ரயில் சேவை இணைப்பு: அரக்கோணம், சூலூர்பேட்டை ரயில்கள் வேளச்சேரி வரை செல்லும்

சென்னை பறக்கும் ரயில் தடத்துடன் புறநகர் ரயில்சேவை இணைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக அரக்கோணம், சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் வேளச்சேரி வரை செல்லும். இதேபோல், வேளச் சேரியில் இருந்து புறப்படும் பறக்கும் ரயில்கள் திருத்தணி, அரக் கோணம், ஆவடி வரை நீடிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய முறை இன்று முதல் அமலாகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில் எண் 42702: பொன்னேரி யில் காலை 7 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 8.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும். பின்னர், இதே ரயில் (புதிய ர.எண். 42750) அங்கிருந்து புறப்பட்டு காலை 8.55 மணிக்கு வேளச்சேரியை சென்றடையும்.

ரயில் எண் 43610: ஆவடியில் காலை 7.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 8.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும். பின்னர், இதே ரயில் (புதிய ர.எண்.43650) அங்கிருந்து புறப்பட்டு காலை 9.20 மணிக்கு வேளச்சேரியை சென்றடையும்.

ரயில் எண் 43804: அரக்கோணத் தில் காலை 7 மணிக்கு புறப்படும் பெண்களுக்கான மின்சார சிறப்பு ரயில், காலை 8.55 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடை யும். பின்னர், இதே ரயில் (புதிய ர.எண்.43932) அங்கிருந்து புறப் பட்டு காலை 9.45 மணிக்கு வேளச் சேரியை சென்றடையும்.

ரயில் எண் 42802: சூலூர்பேட்டை யில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும். பின்னர், இதே ரயில் அங்கிருந்து புறப்பட்டு (புதிய ர.எண்.42850) காலை 10.35 மணிக்கு வேளச்சேரியை சென்றடையும்.

ரயில் எண் 41050: வேளச்சேரியில் காலை 11.20 மணிக்கு புறப்படும் (முந்தைய நேரம்:11.00) மின்சார ரயில், மதியம் 12.05 மணிக்கு சென்னை கடற்கரையை வந்து சேரும், பின்னர், இதே ரயில் (புதிய ர.எண். 43941) அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு திருத்தணியை சென்றடையும்.

ரயில் எண் 41094: வேளச்சேரியில் மாலை 5.15 மணிக்கு புறப்படும் பெண்களுக்கான சிறப்பு ரயில் மாலை 6 மணி அளவில் சென்னை கடற்கரையை வந்து சேருகிறது. பின்னர், இதே ரயில் (புதிய ர.எண்.43931) அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

ரயில் எண் 41116: வேளச்சேரியில் இரவு 7.30 மணிக்கு (முந்தைய நேரம் இரவு 7.20 மணி) புறப்படும் மின்சார ரயில் இரவு 8.15 மணிக்கு சென்னை கடற்கரையை வந்து சேரும். பின்னர், இதே ரயில் (புதிய ர.எண்.43651) அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு ஆவடிக்கு சென்றடையும்.

ரயில் எண் 41126: வேளச்சேரி யில் இரவு 8.50 மணிக்கு புறப் பட்டு இரவு 9.35 மணிக்கு சென்னை கடற்கரையை வந்து சேரும். பின்னர், இதே ரயில் (புதிய ர.எண்.43653) அங்கிருந்து புறப்பட்டு இரவு10.30 மணிக்கு ஆவடியை சென்றடையும்.

மேற்கண்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத் தில் 5 நிமிடங்கள் வரை நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் சேவைகள் நீடிக்கப் பட்டுள்ள நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து வேளச் சேரிக்கு புறப்படும் (காலை 8.15, காலை 8.35, காலை 9.05, காலை 9.55 ) 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், வேளச்சேரியில் இருந்து கடற்கரை செல்லும் (காலை 11.15 மணி, இரவு 7.30 மணி, இரவு 8.50) 3 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய முறைகள் இன்று முதல் அமலாகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x