

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நேற்று 4 நூல்கள் வெளியிடப்பட்டன.
தஞ்சாவூரில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் நேற்று, ‘மொழித் தூய்மைக் கோட்பாடும் இயக்கங்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் இளங்குமரனார் தலைமை வகித்தார். முனைவர் வீ.அரசு தொடக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, ‘தனித் தமிழ் இயக்க முன்னோடிகள்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு புலவர் க.முருகேசன் தலைமை வகித்தார். அன்புவாணன் வெற்றிச்செல்வி தொடக்க உரையாற்றினார்.
பின்னர், ‘தனித் தமிழியக்க தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற் றது. இம்மாநாட்டில், பழ.நெடு மாறன் எழுதிய ‘வள்ளலார் மூட்டிய புரட்சி’, முனைவர் ராசேந்திரன் எழுதிய ‘தமிழும் இந்தோ ஐரோப் பிய மொழிகளும்’, ‘தொல்காப்பியம் - வேர்ச் சொல்லாய்வு நோக்கு’, ’பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட தமிழ் - இந்தோ ஐரோப்பிய உறவு’ ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டன.