

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து நடத்திய இந்த ஆண்டுக்கான 'டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் சுற்றுச்சூழல் மற்றும் புதிய கண்டு பிடிப்புகளுக்கான விருது' வழங் கும் விழா மற்றும் இளை ஞர்கள் உச்சி மாநாடு ஆகி யவை நடைபெற்றன.
விழாவின்போது ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் சி.வி.ஜெயக்குமார் அனைவரை யும் வரவேற்றார். கல்வி மற்றும் விளையாட்டில் சாய்ராம் கல்லூரி மாணவர்கள் புரிந்த சாதனைகளை விளக்கினார். சாய்ராம் கல்விக் குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை உரை யாற்றினார். “பொறியியல் மாண வர்கள் தங்களின் அறிவாற்ற லைக் கொண்டு புதிய படைப்பு களை உருவாக்கி அன்றாட பிரச் சினைகளுக்கு எளிய தீர்வு கண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட் டுச் செல்ல வேண்டும்” என்றார்.
ஐசிடி அகாடமி தலைமை செயல் அதிகாரி எம்.சிவக்குமார் தொடக்க உரையாற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவன மனித ஆற்றல் பிரிவு வணிகத் தலைவர் சுஜித்குமார், டிஐஇ நிறுவன தலைவர் நாராயணன், சிஃபி டெக் னாலஜி நிறுவன தலைமை நிதி அதிகாரி எம்.பி.விஜயகுமார், நேச் சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமார வேல், பேச்சாளர் பாரதி பாஸ்கர், நாஸ்காம் கே.புருஷோத்தமன், எல்எம்இஎஸ் நிறுவனர் பிரேம் ஆனந்த் சேதுராஜன், மெட்டா பிளாஸ்ட் ஆட்கிராப்ட்ஸ் வரிந்தர் சிங், குளோபல் பாவன் சைபர்டெக் குழும தலைமை செயல் அதிகாரி மைக் முரளிதரன், விஷனரி தொழில்முனைவோர் தொடக்க வழிகாட்டி கே.வைத்தீஸ்வரன், ஃபியூச்சர் ஃபோகஸ் இன்ஃபோ டெக் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் வீரேந்திர மாதூர், செயல் பயிற்சியாளர் மற்றும் செயலாக்குநர் கேப்டன் ரகுராமன் ஆகியோர் பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
விவசாயம், எரிசக்தி, நீர்வள மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல், உற்பத்தி, அடிப்படை கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் தலா 20 சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை போட்டியாளர்கள் சமர்ப்பித்தனர். விழாவின் இறுதியில் 'டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சுற்றுச் சூழல் மற்றும் புதிய கண்டு பிடிப்புகளுக்கான விருது' வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட் டது. சாய்பிரகாஷ் லியோமுத்து, ஏபிஜே அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் வி.பொன்ராஜ், எல்காட் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் ரூ.15 லட்சம் அளவிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.