

உலகில் முதல்முறையாக சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு புதிய தொழில்நுட்பத்தில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.
கேரள மாநிலத்தைச் சேர்ந் தவர் சுலோச்சனா (83). மகன் சந்திரனுடன் சென்னை மயி லாப்பூரில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இடது கண்ணில் கண் அழுத்த நோயால் (க்ளூக்கோமா) பாதிக்கப்பட்டிருந்த சுலோச் சனா, சென்னை கதீட்ரல் சாலை யில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவமனைத் தலை வர் டாக்டர் அமர் அகர்வால் கண் அழுத்த நோய்க்கு வழக்க மாக செய்யும் லேசர் மற்றும் அறுவை சிகிச்சையை செய் யாமல், புதிதாக கண்டுபிடிக் கப்பட்ட நவீன தொழில்நுட்பத் தில் சிகிச்சை செய்ய திட்ட மிட்டார். அதன்படி டாக்டர் அமர் அகர்வால் தலைமையிலான குழுவினர் நவீன தொழில்நுட்ப முறையில் (சிங்கிள் பாஸ் ஃபோர் பீப்பிலோபிளாஸ்டி) கண் அழுத்த நோய்க்கு சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சைக்குபின் சுலோச்சனா நலமாக இருக்கிறார்.
இதுகுறித்து டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கண்ணில் இருந்து வரும் நீர் வெளியேற வேண்டும். அப் படி வெளியேறாமல் தங்கும் போது கண்ணில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனை கண் அழுத்த நோய் என்கிறோம். இந்த பெண்மணிக்கு கண் அழுத்தம் அதிகமாகவே இருந் தது. அப்படியே விட்டிருந் தால், அவர் கண் பார்வையை முற்றிலும் இழந்திருப்பார். லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சையைவிட, இந்த புதிய தொழில்நுட்பத்திலான நவீன சிகிச்சை நல்ல பலனை கொடுத்துள்ளது. உலகில் முதல் முறையாக கண் அழுத்த நோய்க்கு, இந்த புதிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது கண் அழுத்தம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் கண் அழுத்த நோயால் பார்வையை இழக் கின்றனர். இந்தியாவில் 35 வய தைக் கடந்த ஆண், பெண் இரு வருக்கும் கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. கண்ணில் உள்ள நரம்பு பாதிக்கப்பட் டிருந் தால் மீண்டும் பார்வையை கொண்டு வரமுடியாது. கண்ணில் பிரச்சினை இருந் தால் உடனடியாக கண் டாக்டரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும். குடும் பத்தில் யாருக்காவது கண் அழுத்த நோய் இருந்தால், மற்றவர்களும் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்தார்.