

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்கும் நோக்கில் முதல் முறையாக வரும் 29-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படவுள்ளது.
மக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் கிடைப்பதற்காக சென்னை மண்டல போஸ்போர்ட் அலுவலகம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முதியவர்கள் (60 வயதுக்கு மேல்), மாற்றுத் திறனாளிகள், மாணவர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் கிடைப்பதற்காக வரும் 29-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு மேளா நடத்தப்பட உள்ளது. சாலிகிராமம், தாம்பரம், அமைந்தகரையில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையங்கள் அன்றைய தினம் இயங்கும்.
இந்த சிறப்பு முகாமில் பங்கேற்பதற்கான முன்பதிவு 3 நாட்களுக்கு முன்பு தொடங்கும். www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். இந்த சிறப்பு முகாமில் ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிக்க முடியாது.