

மறைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி உடல் அடக்கம் நேற்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், திமுக செயல் தலை வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரிய சாமி உடல்நலக் குறைவு காரண மாக, சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி காலை காலமானார். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டுவரப் பட்டு, போல்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதிச் சடங்குகள் நேற்று காலை நடைபெற்றன. காலை 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி யது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச் சர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
போல்பேட்டையில் உள்ள பெரியசாமியின் சொந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது. பெரியசாமியின் மகளும், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப் பினருமான பெ.கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பெரியசாமி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.