

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த மாலை நேரத்தில் சுண்டல் வழங்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 13,274 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு படிக்கும்போது ஏற்படும் சோர்வை போக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை சுண்டல் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் மாலை 4 மணி அளவில் சுண்டல் வழங்கப் படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.1 கோடியே 66 லட்சத்து 75 ஆயிரத்து 648 செலவிடப்படும்.
கோட்டூர்புரம் கெனால் ரோடு மற்றும் தி.நகர் சோமசுந்தரம் விளையாட்டுத் திடல் கள் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு இணை யாக உருவாக்கப்படும். இந்த விளையாட்டுத் திடல்கள் ஹாக்கி, கால்பந்து, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற பன்னோக்கு விளை யாட்டு அரங்கமாக உருவாக்கப்படும். மேலும், மின்னொளியில் விளையாடக்கூடிய வசதி களையும் அங்கே ஏற்படுத்தி நவீன விளையாட் டுத் திடலாகவும் மாற்றப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.