சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரை புழல் சிறையில் வீடியோ எடுத்த போலீஸார்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரை புழல் சிறையில் வீடியோ எடுத்த போலீஸார்
Updated on
1 min read

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமாரை புழல் சிறை வளாகத் தில் வைத்து போலீஸார் நேற்று வீடியோவில் பதிவு செய்தனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலை தொடர்பாக திருநெல் வேலி மாவட்டம் செங்கோட் டையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத் துள்ளனர்.

சுவாதி கொலை சம்பவத் தின்போது, அங்கிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த உருவம், ராம்குமாரின் உருவத்துடன் பொருந்துகிறதா என்பதை அறிய போலீஸார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நுங்கம் பாக்கம் உதவி ஆணையர் தேவ ராஜ், 2 வீடியோ கிராபர்கள், 1 போலீஸ்காரர் என 4 பேர் நேற்று காலை 7 மணிக்கு புழல் சிறைக்கு சென்றனர்.

தொடர்ந்து ராம்குமாரை சிறை வளாகத்துக்கு உள்ளேயே அரை கிலோ மீட்டர் நடக்க வைத்து வீடியோ வில் பதிவு செய்தனர். புகைப் படமும் எடுக்கப்பட்டது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in