Published : 07 Apr 2017 09:54 AM
Last Updated : 07 Apr 2017 09:54 AM

செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி நெல்லை இளைஞர் கோவையில் அடித்துக் கொலை: குடும்பத்தினருக்கு வீடியோ அனுப்பிய மாணவர்களிடம் விசாரணை

கோவை அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் களும், பொதுமக்களும் சரமாரி யாகத் தாக்கியதில் நெல்லை இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை கோவில்பாளையம் வையாபுரி நகரில் உள்ள சசினா அடுக்குமாடி குடியிருப்பின் முன்பு கடந்த 5-ம் தேதி அதிகாலை இளை ஞர் ஒருவரது சடலம் கிடப்பதாக, குடியிருப்பு உரிமையாளர் ராம சாமி(69) போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். கோவில்பாளையம் போலீஸார் அங்கு வந்து பார்த்த போது, உடலில் காயங்களோடு, உள்ளாடை மட்டும் அணிந்த நிலை யில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.

சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அங்கு உள்ளவர்களிடம் விசாரிக்கத் தொடங்கினர். அதில், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள தரும புரி மாவட்டம் பாலக்கோடு, ராமர் கோட்டையைச் சேர்ந்த சபரி(20), ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ் வரம் அடுத்துள்ள தங்கச்சிமடத் தைச் சேர்ந்த ஆண்டனி(20) ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரும், அருகில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் மெக்கட்ரா னிக்ஸ் 3-வது ஆண்டு படிக்கும் மாணவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம் ராதா புரம் கூட்டப்புளி வடக்கு வீதியைச் சேர்ந்த புஷ்பா என்பவரது மகன் மைக்கேல் லிபர்டி(32). சட்டப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலை யில், நண்பர் ஒருவரை பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு ஏப்.4-ம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, ஏப்.5-ம் தேதி அதிகாலை கோவை கோவில் பாளையம் பகுதிக்கு வந்துள்ளார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்த மைக்கேல் லிபர்டி, சபரியின் அறையில் செல்போனைத் திருடியதாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த சபரியும், ஆண்டனியும் அவரைப் பிடிக்க முயற்சித்துள் ளனர். அப்போது மாடியின் முதல் தளத்தில் இருந்து மைக்கேல் லிபர்டி கீழே குதித்து தப்ப முயன்று காயமடைந்தார். உடனே நண்பர்கள் இருவரும், மேலும் சிலருடன் சேர்ந்து அவரை சரமாரி யாகத் தாக்கியுள்ளனர். அதில், மைக்கேல் லிபர்டி உயிரிழந்தார் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர் பாக 10-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மைக்கேல் லிபர்டியின் உடலைப் பெறுவதற் காக வந்த அவரது குடும்பத்தினர், சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும், கொலையில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ அனுப்பினர்

வழக்கறிஞர்கள் கூறும்போது, ‘‘இறந்த இளைஞரின் சகோதரர் ஜெர்லின் கரோல் வழக்கறிஞராக உள்ளார். அவருக்கு ஏப்.5-ம் தேதி, ‘செல்போன் திருட முயன்றபோது ஒருவர் பிடிபட்டுள்ளார். உங்களது விசிட்டிங் கார்டு வைத்திருக்கிறார்’’ என சபரி என்பவர் செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் தாக்கப்படுவதை வீடியோவாக எடுத்து செல்போனில் அனுப்பி வைத்தனர். தாக்க வேண்டாம், அருகில் உள்ள போலீஸில் ஒப் படையுங்கள் என தெரிவித்தோம். மீண்டும் தொடர்புகொண்டபோது செல்போன் அணைக்கப் பட்டிருந்தது.

மதியம் 12.30 மணியளவில், மைக்கேல் லிபர்டி தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்துக்கு திருநெல் வேலி போலீஸார் மூலம் கோவில் பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக ஆடைகள் அவிழ்க்கப்பட்டு கட்டி வைத்து கீழே அமர்த்தி, ஏராள மானோர் சுற்றி நின்று அடிப்பது போன்ற வீடியோ எங்களிடம் உள்ளது. அதேபோல போனில் பேசிய பதிவுகளும் உள்ளன. எனவே கொலை வழக்காக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 12 பேரை கைது செய்ய வேண்டும்’’ என்றனர். கோரிக்கையை போலீஸார் ஏற்றதையடுத்து உடலை பெற்றுச் சென்றனர்.

கோவை மாவட்ட காவல்கண் காணிப்பாளர் ரம்யா பாரதி கூறும் போது, ‘‘வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. அதேபோல, இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப் படும் நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

இதற்கிடையே இறந்த இளை ஞரின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருப்பதையும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதையும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x