Published : 04 Mar 2017 08:01 AM
Last Updated : 04 Mar 2017 08:01 AM

வங்கிகளில் 4 முறைக்கு மேலான பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்: ரிசர்வ் வங்கியிடம் பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்

நான்கு முறைக்கு மேலான பணபரிவர்த்தனைக்கு ரூ.150 கூடுதல் கட்டணம் விதிக்கும் தனியார் வங்கிகளின் முடிவை ரத்து செய்யக் கோரி ரிசர்வ் வங்கி யில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மாதம் 4 முறைக்கு மேல் ரொக்க மாக டெபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ நேற்று முன்தினம் (மார்ச் 2) முதல் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்து உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

ஏற்கெனவே ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை எனும் பெயரால் சாமானிய மக்கள் சிறிய, நடுத்தர, மொத்த வணிகர்கள், பால் முகவர்கள் என பலதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தனியார் வங்கிகள் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் இதுபோன்ற தன் னிச்சையான முடிவை எடுத் திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகள் அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு பல்வேறு சேவைக் கட்டணங்களை வசூலித்து வரும் சூழ்நிலையில் தற்போது தனியார் வங்கிகள் நடைமுறைப்படுத்தியிருக்கும் இக்கட்டண உயர்வு அத்தியாவசிய பொருட்களின் மறைமுக விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும்.

எனவே, வரும் 14-ம் தேதிக்குள் தனியார் வங்கிகள் இந்த சேவைக் கட்டணத்தை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் அனை வரையும் ஒன்றுதிரட்டி ஒரே நேரத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதுமின்றி கணக்கையும் ரத்து செய்யும் போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x