

கன்னியாகுமரி மாவட்டம், உண் ணாமலைக்கடையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு காந்தியவாதி சசி பெருமாள் போராட்டம் நடத்தினார். அங்கு இருந்த செல்பேசி டவரில் ஏறி எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது சசிபெருமாள் மரண மடைந்தார்.
சசிபெருமாள் மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று அவரது நினைவு நாளில் பொதுநல அமைப்புகள், மதுவுக்கு எதிரான அமைப்புகள் அப்பகுதியில் அஞ்சலி செலுத்த முடிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் சசிபெருமாள் உயிரிழந்த செல்பேசி டவர் அருகே போலீஸார் குவிக்கப்பட்டனர்.