

மதிமுகவின் தொழிற்சங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவராக ஆவடி அந்திரிதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி ( மதொமு) நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழுக் கூட்டம் சென்னை தாயகத்தில் நடந்தது. இதற்கு மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆணையாளராக செயல்பட்டார். இந்த தேர்தலில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவராக ஆவடி அந்திரிதாஸும், பொதுச் செயலாளராக திருப்பூர் சு.துரைசாமி, பொருளாளராக பி.அருணகிரியும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
மேலும் மதொமுவின் துணைத் தலைவர்களாக மு.தியாகராசன், கி.திருநாவுக்கரசு, சு.ஜீவன், பெல் இரா.இராசமாணிக்கமும், இணைப்பொதுச் செயலாளர்களாக மு.செந்திலதிபன், எஸ்.வி.பரம சிவன், எஸ்.மகபூப் ஜானும், செயலாளர்களாக இரா. மணி மாறன், ஏ.சந்திரன், கி.வெங்க டேசன், எஸ்.காதர் மைதீன், க.ஆறுமுகம், எஸ்.மனோகரன், டி.கபாலி, ஏ.அலக்ஸ், வி.ஜார்ஜ், வேதா வேணுகோபால், எஸ்.பாலு, வி.இராமசாமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.