வெப்பச்சலனம் காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

வெப்பச்சலனம் காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள் ளது. ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் ஏற்படும் வெப்பச் சலனம், அதனால் உருவாகும் மேகக்கூட்டங்கள் காரணமாக கனமழை பெய்துள்ளது.

7-ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சத்தியமங்கலம், வாடிப் பட்டியில் 7 செ.மீ., உசிலம் பட்டியில் 6 செ.மீ., மாயனூர், ஓசூர், ஆண்டிப்பட்டி, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை 33 டிகிரி, 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in