Published : 18 Apr 2016 02:50 PM
Last Updated : 18 Apr 2016 02:50 PM

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து 25 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டார்.

அதன் விவரம்:

1. அவிநாசி (தனி) - எம்.ஆறுமுகம்

2. சிவகங்கை - குணசேகரன்.எஸ்

3. பென்னாகரம் - நஞ்சப்பன்

4. தளி - ராமச்சந்திரன்

5. பவானிசாகர் - சுந்தரம்

6. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - லிங்கம்

7. வால்பாறை - மணிபாரதி (பத்திரிகையாளர்)

8. திருத்துறைப்பூண்டி - உலகநாதன்

9. குடியாத்தம் - லிங்கமுத்து

10. சைதாப்பேட்டை - ஏழுமலை

11. திருவாரூர் - மாசிலாமணி

12. மாதவரம் - ஏ.எஸ்.கண்ணன் (தலித்)

13. கீழ் பென்னாத்தூர் - ஜோதி

14. வீரபாண்டி - ஏ.மோகன்

15. அருப்புக்கோட்டை - செந்தில்குமார்

16. மதுரை கிழக்கு - காளிதாசன்

17. திருப்பரங்குன்றம் - கந்தசாமி

18. ஒட்டன்சத்திரம் - சந்தானம்

19. பேராவூரணி - தமயந்தி திருஞானம்

20. ஸ்ரீரங்கம் - புஷ்பம் வைத்தியநாதன்

21. அறந்தாங்கி - லோகநாதன்

22. வாசுதேவநல்லூர் (தனி) - சமுத்திரகனி

23. நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி

24. திருப்பத்தூர் - சாத்தையா

25. திருப்பூர் வடக்கு - ரவி

தோழமை கட்சிகளுக்கு நன்றி:

வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த முத்தரசன், விரும்பிய தொகுதிகளை ஒதுக்கித் தந்ததற்காக தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களம் காணும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. என்னுடன் சேர்த்து 9 முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. இது கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம்.

கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன், நல்லகண்ணு ஆகியோர் வயது மூப்பு, உடல் நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை" என்றார்.

தனி தொகுதி அல்லாத இரண்டு தொகுதிகளில் தலித்துகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியலில் இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x