விஜயபாஸ்கரின் ஊழல்களுக்கு இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அவரை இன்னும் அமைச்சரவையில் வைத்து அழகு பார்ப்பது சரியல்ல. அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் தொடர்புடைய 55 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ஆய்வுகளில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக பணத்தை வாரி இறைத்ததற்கான ஆவணங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் அவர் வாங்கிக்குவித்த லஞ்சத்திற்கான பட்டியலும் சிக்கியுள்ளன.
விஜயபாஸ்கரின் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஒன்றின்படி கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அவருக்கு ரூ.5.16 கோடி கையூட்டு கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் 2 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரம் கையூட்டாக கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூ.32 லட்சம் லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூ.1.28 கோடி கையூட்டு பெறப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத்துறை இயக்குனரகம் தொடர்பான பணிகளில் ரூ.41.50 ஊழல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாற்றுகளை நானோ, பாட்டாளி மக்கள் கட்சியோ முன்வைக்கவில்லை. மாறாக, அமைச்சர்விஜயபாஸ்கரின் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கையூட்டு வரவு செலவு நடந்தது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆகும். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மேற்பார்வையிடுவதாகக் கூறிக்கொண்டு அப்பல்லோ மருத்துவமனையிலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டிருந்தார். அந்த நேரத்திலேயே இந்த அளவுக்கு ஊழல் நடைபெற்றிருந்தால், விஜயபாஸ்கர் முழுவீச்சில் களப்பணியாற்றிய காலத்தில் எவ்வளவு ஊழல் செய்திருப்பார் என்பதை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காலத்திலும் விஜயபாஸ்கர் போன்றவர்கள் ஊழலில் திளைத்துக் கொண்டிருந்தனர் என்றால், ஜெயலலிதா மீது அவர்கள் கொண்டிருந்த பாசம் எவ்வளவு போலியானது என்பதை உணரலாம்.
சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்ற நாளில் இருந்து அத்துறையில் நடைபெற்ற ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளை சேர்க்க வேண்டும் என்றால் அதற்காக ஜெயாத் தொலைக்காட்சியில் விளம்பரம் அளிக்க வேண்டும், மருந்து கொள்முதல், மருத்துவக் கல்லூரிகளுக்கு இணைப்பளித்தல் உள்ளிட்டவற்றுக்காக கோடிகளில் கையூட்டு வாங்கப்பட்டதையும், ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்த மூத்த அதிகாரி ஒருவர் அமைச்சர் தரப்பால் மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதையும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.
விஜயபாஸ்கரின் ஊழல்களுக்கு இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அவரை இன்னும் அமைச்சரவையில் வைத்து அழகு பார்ப்பது சரியல்ல. அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தும்படி கையூட்டுத் தடுப்புப்பிரிவு காவல்துறைக்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும்.