Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM

ஆளுமைக்கு ஓர் அடையாளம் பி.காம். பழநிசாமி!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்த பி.காம். பழநிசாமி (83) கடந்த 4-ம் தேதி இரவு காலமானார். ‘பி.காம்’ என, தாம் பெற்ற பட்டத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்படும் அவர் குறித்த சில தகவல்கள்:

1947-ம் ஆண்டு இந்திய விடு தலைத் திருநாளைத் துக்க நாள் என அறிவித்தார் தந்தை பெரியார். அப்போது 16 வயது பள்ளி மாண வரான பழநிசாமி விடுதலைத் திரு நாள் மாணவர்கள் ஊர்வலத்தில் கருப்புச் சட்டை அணிந்து சென்றார்.

1949-ம் ஆண்டு அண்ணாவின் தலைமை ஏற்று சங்கரன்கோவில் நகரில் திமுக கிளையைத் தொடங்கி, ஆவணங்களை எழுதிப் பதிவு செய்தார். 1967 பொதுத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய சூழ்நிலையில், அத்தொகுதி முதன் முறையாக தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது.

அந்நாளில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருள் தகுதி யான வேட்பாளர் கிடைப்பது அரிதாக இருந்தது. தேடியலைந்து, குவளைக் கண்ணி என்ற கிராமத்தில் படித்த இளைஞரான பே.துரைராஜ் என்பவரை, காரில் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்று, அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி, வேட்பாளராக அறிவிக்கும்படிக் கேட்டுக் கொண் டார். அப்போது அண்ணா, ‘என்னப்பா உன்னை வேட்பாளராகப் போடலாம் என்று நினைத்து இருந்தேன்; வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே’ என்று வருந்தினாராம்.

தேர்தல் செலவுக் காகத் தலைமைக் கழகம் தந்த தொகை, தினத்தந்தி ஆதித்தனார் தந்த தொகை, வீட்டை அடகு வைத்து வேட்பாளர் தந்த ரூ. 4 ஆயிரம் உள்பட கிடைத்தது ரூ. 17,000. செலவு 12,000 ரூபாய்தான். அதில், இத்தனை பைசா தர்மம் செய்தது உட்பட, துல்லியமாக அவர் எழுதி வைத்த செலவுக் கணக்கு இன்றைக்கும் இருக்கிறது. பாக்கித் தொகையை ஆதித்தனாரிடம் கொண்டு போய் ஒப்படைத்தபோது, அவர் வியந்துபோய், ‘என்னிடம் பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்த முதல் ஆள் நீதான்’ என்று கூறினாராம்.

1970-ல் நகர்மன்றத் தலைவராக பழநிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, நிதி நிலைமை சீராக இல்லை. நகராட்சி நடத்தி வந்த ஏழு பள்ளிகளில், ஐந்து மாதங்களாக ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க இயலவில்லை. எனவே பள்ளிகளை மூடி விடுகிறேன்’ என்று எழுதிக் கொடுத்தார்.

அதைப் படித்து அதிர்ச்சி அடைந்த முதல்வர் கருணாநிதி, ‘இனி நகராட்சிப் பள்ளிகளுக்கு தமிழக அரசே சம்பளம் வழங்கும்’ என அறிவித்தார். தமிழகத்திலேயே முதன்முறையாக, தெருக்களுக்கு வைக்கப்பட்டிருந்த ஜாதிப் பெயர்கள் அனைத்தையும் அகற்றி தலைவர்களின் பெயர்களைச் சூட்டிய பெருமை பழநிசாமியை சேரும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.ஜி.ஆர். முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் தமிழகத்தில் ஜாதிப் பெயர்களை அகற்ற ஆணை பிறப்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x