Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM

திமுகவிடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை: துரோகத்தை பட்டியலிட்டால் பதில் தருவோம்- ஞானதேசிகன் பதிலடி

மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்றும், துரோகத்தை பட்டியலிட்டால் விளக்கம் அளிக்கத் தயார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் கூறியுள்ளார்.

மதச்சார்பற்ற நிலைக்கு காங்கிரஸ் முன்வருமேயானால், பொதுமன்னிப்பு என்ற முறையிலே காங்கிரஸை திமுக ஆதரிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி, திமுகவின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.

அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சி மத்தியில் இன்னும் 5 ஆண்டுகள் ஆண் டால், உலகில் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை மாற்றும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு வீட்டுரிமை வழங்கப்படும். சுகாதாரக் கட்டாய உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறார். அதிமுக ஆட்சியில் பஸ் கட்டணம், பால் விலை மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்தது. இதற்கு நிர்வாகத்துக்கு நிதி தேவையென்று ஜெயலலிதா கூறினார். இது பெட்ரோல் விலைக்கு பொருந்தாதா?

கைதூக்கி விட்ட திமுகவை நன்றி மறந்து விட்டு, எப்படி பழி வாங்கலாம் என்று காங்கி ரஸ் கட்சி செயல்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

கடந்த 9 ஆண்டுகளாக திமுக எங்களோடு அமைச்சரவையில் இருந்தது. ஆட்சிக்கு வரும்போதே, முதலில் தங்களுக்கு என்னென்ன இலாகாக்கள் வேண்டுமென்று எழுதிக் கொடுத்து, அதைக் கேட்டு வாங்கினார்கள். 33 தொகுதி களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஆந்திராவுக்கு கூட அமைச்சர வையில் இந்த உரிமை கிடைக்க வில்லை. ஆனால் திமுகவுக்கு 4 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டன. அதுவும் முக்கியமான துறைகள் வழங்கப்பட்டன.

ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்பு பதவி விலகிவிட்டு, குற்றஞ்சாட்டு கிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கூட்டணியிலிருந்து விலகு வது திமுகவுக்கு வாடிக்கையா னது. பாஜகவுடன் கூட்டணிலிருந்த போதும் இதையேதான் செய்தார் கள். ஆட்சியிலிருந்தபோதே, இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறி விலகியிருக்கலாமே. ஆனால் இப்போது இவர்கள் சொல்லும் காரணங்களும் தத்துவங்களும் ஏற்புடையதல்ல.

பொது மன்னிப்பு என்ற முறை யில் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக திமுக தலைவர் கூறியி ருக்கிறார்?

மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. காங்கிரஸின் துரோகம் குறித்து பட்டியலிட்டால் அதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும்.

அவர்கள் சொல்வது 2ஜியாக இருந்தால், அதற்குப் பதில் இருக்கிறது. 2ஜி வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையில் யாருடைய தலையீடுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் நடந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களாக யார் வாதாட வேண்டும் என்பதும், விசாரணை அறிக்கையும் கூட உச்ச நீதிமன்றத் தின் கண்காணிப்புடன் தான் நடந் தது. இதில் காங்கிரஸைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ராஜாவைப் பொறுத்தவரை, குற்ற வாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும்வரை அவர் நிரபராதிதான்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் மீது, ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல் வழக்கும், கல்மாடி மீது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கும் பதிவானது. எனவே காங்கிரஸ் கட்சி யாரையும் பழிவாங்கவில்லை. கட்சி பேதமின்றி வெளிப்படையாக செயல்பட்டது.

மதச்சார்பற்ற நிலைக்கு காங்கிரஸ் வந்தால் ஆதரிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

இந்தத் தேர்தல் மதச்சார்புள்ள இயக்கத்துக்கும், மதச்சார்பற்ற இயக்கத்துக்கும் இடையிலான போராட்டமாகும். ஆனால், ஏற்கெனவே மதச்சார்பற்ற நிலையில் செயல்படும் காங்கிரஸை, மதச்சார்பற்ற நிலைக்கு வந்தால் என்று திமுக தலைவர் கூறுவதன் அர்த்தம் உண்மையிலேயே எங்களுக்கு புரியவில்லை. மற்ற குற்றச்சாட்டுகளெல்லாம் அவர் ஏற்கெனவே திமுக பொதுக்குழு வில் கூறியவைதான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கோ, மோடிக்கோ திமுக ஆதரவு தராது என்பதை திட்டவட்டமாக திமுக தலைவர் கருணாநிதி சொல்ல வேண்டுமென்று காங்கிரஸும், எங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் அதற்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

திமுகவின் ஆதரவைப் பெறும் நிலைக்கு காங்கிரஸ் வந்தால், திமுகவின் ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா?

அரசியலில் அந்தந்த சூழலுக்கு ஏற்பதான் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும். எனவே தேர்தல் முடிவுக்குப் பிறகு என்னவென்பதை இப்போது கூற முடியாது.

காங்கிரஸ் கட்சி அதல பாதாள நிலைக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

காங்கிரஸ் கட்சி பாதாள நிலைக்கு செல்லவில்லை. பாதா ளம் யாருக்கு என்பதை தேர்தல் முடிவுக்குப் பின் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x