கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய்: தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதி

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய்: தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதி

Published on

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச் சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முட்டை மற்றும் கோழிகளுக்கு தடை விதிக்கும் அபாய சூழல் உரு வாகியிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.

நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 800-க்கும் அதிக மான கோழிப் பண்ணைகள் உள்ளன. அவற்றின் மூலம் நாள் தோறும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டையில் 70 லட்சம் முட்டைகள் கேரள மாநிலம் மற்றும் சத்துணவு திட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கத்தால் பல்லா யிரக்கணக்கான வாத்துகள் தாக்கி இறந்துள்ளதாக, அம்மாநில கால்நடை பரா மரிப்பு துறையினரும் உறுதி செய்துள்ளனர்.

அதையடுத்து பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் பாதிப்புக் குள்ளான மாவட்டங்களில் வாத்து மற்றும் கோழிகளை தீயிட்டு அழிக்க கேரள அரசு முடிவு செய்திருப்பதாகவும், பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுக்க தமிழக முட்டை மற்றும் கோழி களுக்கும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர். செல்வ ராஜ் கூறியதாவது:

அம்மாநிலத்தில் வாத்து களுக்குத்தான் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. கோழி களுக்கு இல்லை. மேலும் அம்மாநிலத்தில்தான் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து முட்டை மற்றும் கோழி அனுப்புவதில் எந்த சிக்கலும் இல்லை.என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் ஆர். நல்லதம்பி கூறும்போது, இன்றைக்கு வரை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை, கோழி அனுப்புவதில் பாதிப்பு இல்லை. வரும் நாட்களில் நிலைமை மாறலாம்’’ என்றார்.

கோழிப்பண்ணையில் நோய் தடுப்பு நடவடிக்கை

பறவைக் காய்ச்சல் நோய் காரணமாக கேரள அரசு தடை விதித் தால் முட்டை, கறிக்கோழி விற் பனையில் பாதிப்பும் முட்டை விலையில் சரிவும் ஏற்படும் என கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் பறவைக் காய்ச் சல் நோய் பரவாமல் தடுக்க கோழிப் பண்ணையாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in