பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
Updated on
1 min read

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் நண்பர்களுடன் தங்கி எலெக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்தார். இவருக்கு கடந்த 18-ம் தேதி திடீரென மூச்சுத் திணறல், காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், உடல்நிலை மோச மடைந்ததால், அவர் நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தனி வார்டில் சேர்த்து அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித் தும் பலனின்றி ரமேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.

இது குறித்து பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

ரமேஷ் முதலில் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால், அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்தனர். இங்கு வரும் போதே அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலை யில், இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

காய்ச்சல் வந்தால் உடனடியாக அரு கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு நல்ல முறையில் இலவச மாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளைப் போன்ற கட்டுப் பாடுகள் எதுவும் இங்கு இல்லாததால், தனியார் மருத்துவமனைகள் இஷ்டத் துக்கு கட்டணம் வசூலிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

உறவினர் கண்ணீர் பேட்டி

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த ரமேஷின் உறவினர் செல்வகுமார் கூறும்போது, ‘‘தனியார் மருத்துவமனை யில் கட்டணம் அதிகம் வாங்கினாலும், எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் என்று நம்பினோம். ஆனால், அவர் கள் கைவிட்டுவிட்டார்கள். ஆரம்பத்தி லேயே அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தால், ரமேஷை பறிகொடுத் திருக்க மாட்டோம்’’ என்று அழுதபடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in