

குடியரசுத் தலைவர் வருவதை யொட்டி சென்னை விமான நிலை யத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில் விருது வழங்கும் விழா வரும் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா வில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வர உள்ளார். அதனால் சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பாதுகாப்பு அதி காரிகளும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் விமான நிலையத்துக்குள் அனு மதிக்கப்படுகின்றனர்.