Published : 02 Mar 2014 02:48 PM
Last Updated : 02 Mar 2014 02:48 PM

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று ஆரம்பம்: முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. 8.75 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வு

பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய தேர்வாக பிளஸ்-2 பொதுத்தேர்வு கருதப்படுகிறது. மேற்படிப்புக்குச் செல்லவும், எதிர்காலத்தில் சேர விரும்பும் துறையை தீர்மானிப்பதிலும் பிளஸ்-2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மிகவும் முக்கியமானது ஆகும்.

இந்நிலையில், ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டபடி, பிளஸ்-2 தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 2,242 மையங்களில் தேர்வு நடக்கிறது. பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் நீங்கலாக, 65,541 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை சந்திக்கிறார்கள்.

தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். இருப்பினும் மாணவர் கள் கேள்வித்தாளை படித்துப் பார்க்க வும், விடைத்தாளில் விவரங்களை குறிப் பிடவும் கேள்வித்தாள், விடைத்தாள் ஆகியவை காலை 10 மணிக்கே அவர்களிடம் கொடுக்கப்படும்.

போலீஸ் பாதுகாப்பு

தேர்வுக்கான வினாத்தாள்கள் ஏற்கெனவே வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்கவும், மதிப்பீட்டு பணிகளை விரைந்து முடித்து தேர்வுமுடிவை முன்கூட்டியே வெளியிடும் வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள் இந்த தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

முதல்கட்ட தேர்வான செய்முறைத்தேர்வு மதிப்பெண் ஆன்லைனில் பதிவு தொடங்கி ரகசிய குறியீட்டு முறையில் (பார்கோடு சிஸ்டம்) விடைத்தாள் மதிப்பீடு செய்வது வரை பல்வேறு புதிய நடைமுறைகளை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பறக்கும் படைகள்

தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகள் நிகழாமல் இருக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 4000 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகள், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். இன்று தொடங்கும் தேர்வு வருகிற 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

புதிய நடைமுறைகள்

பிளஸ்-2 தேர்வில் இந்த ஆண்டு பல் வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. அவற்றின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

*ஆன்லைனில் செய்முறைத்தேர்வு மதிப்பெண் பதிவு.

*மாணவர்களின் புகைப்படம், பதிவுஎண், தேர்வெழுதும் பாடத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் விடைத்தாள்.

*காலதாமதத்தை தவிர்க்கும் வகை யில் 38 பக்கங்கள் கொண்ட விடைத் தாள் தொகுப்பு.

*வினாத்தாள், விடைத்தாள் கட்டுகளை எடுத்துச்செல்ல வழித்தட அதிகாரிகள் நியமனம்

*ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 மாணவர்கள் என்ற புதிய கட்டுப்பாடு.

*ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர்ப்பட்டியல்.

*தேர்வு அறையில் மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் கட்டுகள் பிரிப்பு.

*விடைத்தாள் கட்டுகள் தனி வாகனத் தில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப் பீட்டு மையங்களுக்கு சென்றடைய ஏற்பாடு.

*ரகசிய குறியீட்டு முறையில் (பார் கோடு சிஸ்டம்) விடைத்தாள்கள் மதிப்பீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x