Published : 07 Nov 2014 11:31 AM
Last Updated : 07 Nov 2014 11:31 AM

ரயில் பயணச்சீட்டு விற்பனையை தனியார்மயமாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்த ரயில்வே தொழிலாளர்கள் முடிவு

ரயில் பயணச்சீட்டு விற்பனையை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரியளவில் போராட்டம் நடத்த ரயில்வே தொழி லாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ரயில் முன்பதிவு டிக்கெட் மற்றும் அன்றாட டிக்கெட் விற்பனையை தனியார்மயமாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது, ரயில்வே தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே தொழி லாளர்கள் கூறும்போது, “ரயில் டிக்கெட் விற்பனைக்காக கவுன்ட்டர் களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகின்றனர். ஆனால், வேலைக்கு புதிதாக ஆட்களை நியமிக் கப்படவில்லை. தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதி லும் ஆண்டுதோறும் கணினி முன்பதிவு மையங்களில் டிக்கெட் விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கத்தான் செய்கிறது. எனவே, ரயில் டிக்கெட் விற்பனை தனியார் மயமாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெற்கு ரயில்வே யில் உள்ள 182 கணினி முன்பதிவு மையங்களில், மொத்தம் 440 கவுன்ட்டர்கள் இருக்கின்றன. ரிசர் வேஷன் பிரிவில் ஷிப்டு முறையில் ஆயிரம் தொழிலாளர் களும், வர்த்தகப் பிரிவில் 4 ஆயிரம் பணியா ளர்களும் பணியாற்றுகின் றனர். தெற்கு ரயில்வேயில் 1994-95ம் ஆண்டில் கணக்கு ஆய்வு ஒன்று நடத்தப் பட்டது.

அதன்படி, கணினி முன்பதிவு மையங்களை இயக்கியதற்கான மொத்த செலவு (பணியாளர்கள் சம்ப ளம், மின்சாரம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள்) ரூ.14 கோடியே 24 லட்சத்து 27,593. ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் மூலம் மொத்த வருவாய் ரூ.17 கோடியே 30 லட்சத்து 37,928. அந்த ஆண்டில் சுமார் 2 கோடி பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் விற்கப்பட்டது. ஒரு ரயில் பயணி மூலம் ரயில்வே துறைக்கு ஒரு ரூபாய் 53 பைசா வருவாய் கிடைத்தது.

அதுபோல, 2006-07-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கு ஆய்வில், கணினி முன்பதிவு மையங் களுக்கான மொத்த செலவு ரூ.73 கோடியே 11 லட்சத்து 92,691. முன்பதிவு டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.119 கோடியே 8 லட்சத்து 20,059. ஒரு பயணி மூலம் ரயில்வே துறைக்கு 10 ரூபாய் 22 காசுகள் வருவாய் கிடைத்தது. இப்போதும் இந்த லாபம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

இதுதொடர்பாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ரயில் டிக்கெட் விற்பனையை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து விரைவில் தீவிர போராட்டம் நடத்தவுள்ளோம். கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் வரும் 18, 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கள் சம்மேளன மாநாட்டில் இதுகுறித்து விவாதிக்கப்படும் பின்னர் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

ரயில்வேயில், ரிசர்வேஷன் பிரிவை தனியார்மயமாக்கும் முயற் சியை முறியடிக்க தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள முடிவெ டுத்திருப்பதால் ரயில்வே துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x