தமிழக மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்

தமிழக மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்
Updated on
1 min read

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கக் கோரி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித் துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து போதைப் பொருளை கடத்தியதாக வழக்கு பதிவு செய்தது. இலங்கை நீதிமன் றத்தில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த மீனவ மக்கள், 5 மீனவர்களையும் மீட்கக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பனையூர், தழுதாலி, கடலூர், ஆலி ஆகிய குப்பங்களைச் சேர்ந்த மீனவ மக்கள், மாமல்லபுரம் பகுதியில் இருந்து செய்யூர் வரையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க அப்பகுதியில் சதுரங்கப்பட்டினம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் போராட்டம்

பழவேற்காடு மற்றும் அதனை ஒட்டிய 15 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீன வர் சங்கத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர், லைட் அவுஸ் குப் பம் அருகே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன வர்களுக்கு ஆதரவாக பழவேற் காடு பகுதி வியாபாரிகள் கடை யடைப்பு செய்தனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in