

சென்னையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் தந்தை, மகள் பலியாகினர்.
திருப்பதி ராவ் (41), சென்னை ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர். இவர் இன்று காலையில் தனது மகள் நீராஞ்சனா(12), ரோஹித்(10) ஆகியோரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.
அப்போது, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று திருப்பதி ராவ் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது மகள் நீராஞ்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.