

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலக வரவேற்புப் பிரிவில் பணியாற்றிய சிவகுரு, சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பணியில் இருந்த சத்தியசீலன், தலைமைச் செயலக வரவேற்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா, நெல்லைக்கும் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ் செல்வராஜ், டெல்லி தமிழ் நாடு இல்லத்துக்கும் மாற்றப்பட் டுள்ளனர். காத்திருப்பில் இருந்த மாயக்குமரேசன் வணிக வரித் துறைக்கும், கோவை போக்கு வரத்து கழகத்தில் பணிபுரியும் தமிழ்மொழி அமுது, திருப்பூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்த நவநீதகிருஷ்ணன் கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மற்றும் கன்னியாகுமரிக்கு மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.