கணினி பயிற்றுநர் பணி: ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள்

கணினி பயிற்றுநர் பணி: ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள்
Updated on
1 min read

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தெரிவுப் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நடைபெற உள்ளது.

எனவே, வேலை வாய்ப்பகத்தால் பரிந்துரை செய்யப்படும் பதிவுதாரர்கள் மட்டுமே தெரிவுப் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பணித் தெரிவு தொடர்பாக எவ்வித விண்ணப்பங்களையும் பணி நாடுவோர்களிடமிருந்து கோரவில்லை. எனவே, கணினி பயிற்றுநர் பணி தெரிவு சார்ந்த விண்ணப்பங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டாமென பணி நாடுவோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in